சிந்தகம் அல்லது சிந்தம் என்றால் புளி (புளியமரம்) எனப் பொருள். இத்தலத்திலுள்ள புளிய மரத்தடியில் சிவலிங்கம்
ஒன்றை ஸ்தாபித்து வழிபட்டான் இந்திரன். இதனால் இவ்விறைவன் சிந்தாமணிநாதர் எனும் பெயரைக் கொண்டார்.
தனது பெயரால் இவ்வூர் அமைய வேண்டும் என இந்திரன் விருப்பம் கொண்டதால் வாசவனூர் என்றழைக்கப்பட்டது.
வாசவன் என்பது இந்திரனின் மறு பெயர்.
குலசேகர பாண்டியன் கொண்ட பெருநோயைக் குணப்படுத்திய தேவன் வாசுதேவன் என்றானான். வாசுதேவன் குடிகொண்ட
நல்லூர் என்பதனால் வாசுதேவநல்லூர் எனப் பெயர் கொண்டது.
குலசேகரனின் நோயைக் குணப்படுத்திய புண்ணிய தீர்த்தக் குளம் கும்ப புஷ்கரிணி என்ற பெயரில் கோவிலுக்கு
முன்புறம் உள்ளது.