அருள்மிகு ஆதி சிவசைலநாதர் திருக்கோவில் - அத்ரி தபோவனம்

Primary Deity
அத்ரி பரமேஸ்வரர் எனப்படும் ஆதி சிவசைலநாதர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
கிருஷ்ணகிரி
Contact Number
+91-Not Available

Information not available.

இயற்கை எழில் சூழ்ந்த வனப்பகுதி. ஆன்மீக அதிர்வுகளும், அருவிகளும் கொண்ட மலை. ராமாயணத்தில் ஸஹ்யாத்ரி என்று கூறப்பட்டுள்ள இடம் இது. அத்ரி முனிவர்களும் அவரது சீடர்களும் தவமிருந்த இடம்.

இரட்டை விநாயகர், சாஸ்தா, வன துர்க்கா, அத்ரி மற்றும் அகஸ்தியர், நாகப்ரதிஷ்டைகள், மகிஷாசூரமர்த்தினி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். இங்குள்ள அத்தி மரத்தடியில் அத்ரி முனிவர் வழிபட்ட தியானலிங்கம் உள்ளது.

தியானலிங்கத்தை வழிபடுபவர்களுக்கு கிரக தோஷங்கள் அண்டாது.

மூலஸ்தானத்தில் இரண்டு லிங்கங்கள் உள்ளன. மூலவரான அத்ரி பரமேஸ்வரர் அழகிய லிங்க வடிவம். இவரை ஆதி சிவசைலநாதர் என்பார்கள். அம்பாள் அத்ரி பரமேஸ்வரி, எண்பட்டை பாணத்துடன் கூடிய லிங்கமாக தரிசனம் தருகின்றாள்.

மூலஸ்தானத்தின் வலப்புறமாக சிறிது தூரம் நடந்து சென்று பார்த்தால், மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு சிகரம் ரம்யமாக தோற்றமளிக்கின்றது. பார்ப்பதற்கு கைலாய சிகரம் போன்றே காட்சியளிக்கிறது.

அத்ரி முனிவர் தலைகீழாக தொங்கியபடி தவம் செய்த விருட்சத்தை ஆதிசேஷனின் அம்சமாக கருதி வழிபட்டு வருகின்றனர். மரத்தின் அடிப்பகுதி கருவறை போன்று உட்குழிந்து காணப்படுகிறது. பார்ப்பதற்கு ஆதிசேஷன் படம் எடுப்பது போன்றே அமைந்துள்ளது. இது அம்ருதவர்ஷிணி எனும் ஸ்தல விருட்சம். பௌர்ணமிக்கு முன் ஏகாதசியிலிருந்து பஞ்சமி வரை, அனைத்து கிளைகளின் வழியாக பன்னீர் துளிகளைத் தெளிப்பதால் இப்பெயர் கொண்டது.

அருகே உள்ள சிறு தொட்டியில் ஆகாயகங்கை உள்ளது. அருகே கங்கை விக்ரகமாக காட்சி தருகிறாள். தொட்டிக்குள் பார்த்தால் கையளவு தண்ணீர் மட்டுமே இருக்கும். அது ஒரு மடை வழியே பூமிக்குள் சென்று, சற்றுத் தள்ளி உள்ள துவாரம் வழியே பெரிய அளவில் திபுதிபு என ஓடி வெளிப்படுகிறது.

மாதம் ஒரு முறை ஏதேனும் ஒரு ஞாயிறன்று நடக்கும் மஹா பிரத்யங்கிரா யாகம் இங்கு விசேஷம். இதில் கலந்து கொண்டு வனதுர்க்கையை பிரார்த்தனை செய்தால் சகல சௌபாக்யங்களும் கிட்டும் என்பர்.

இங்கிருந்து ஏழு மைல் தூரத்தில் கருப்பசாமி கோவில் கொண்டுள்ளார். க்ஷேத்ர துவார காவலராக எழுந்தருளியுள்ளார். அருகே ஸ்ரீ பொன் பெருமாள் சாஸ்தா கோவில் கொண்டுள்ளார். சற்று தள்ளி நாகமலை எஸ்டேட் உள்ளது.

அத்ரி முனிவரால் உண்டாக்கப்பட்ட அத்ரி தீர்த்தம் 1500 அடி உயரத்தில் சிவசைல மலையிலுள்ளது. இது கோவிலின் வடபுறமாக ஓடி திருப்புடைமருதூரில் பொருணை நதியுடன் கலக்கிறது. இது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அணையிலிருந்து 1 மணி நேர நடைப்பயணம் போக வேண்டும். வழியில் கல்லாறு உள்ளது. பூஜை பொருட்கள் கிடைக்காது, கையோடு எடுத்து செல்ல வேண்டும். (வழிகாட்டி அன்பர் - கண்மணி என்ற பக்தர்) கண்மணி இசக்கி - 99949 90167

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...