தினமும் புஷ்பக் கூடையுடன் ஆற்றைக் கடந்து வந்து ஸ்வாமிக்கு கைங்கர்யம் செய்யும் அருள்வித்தன் எனும் பக்தனை சோதிக்க எண்ணிய சிவபெருமான், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச் செய்தார். வெள்ளத்தின் அளவு அவனது வாய் வரை வந்து விட்டது. அவனை ஆற்று வெள்ளம் அடித்துக் கொண்டு போகும் நிலையிலும், பூக்கூடையை விடாது பிடித்துக் கொண்டு இருந்தான். ஸ்வாமிக்கு பயன்படும் மலர்களை, காலம் தாழ்த்தி கொண்டு செல்ல நேருமோ என துயருற்றான்.
அவனது உறுதியான நிலைப்பாட்டையும், பக்தியையும் மெச்சிய இறைவன், அவனுக்கு துறை காட்டி, கரையேற விட்டு, ஞான உபதேசம் செய்தார். இதனால் ஸ்வாமிக்கு துறை காட்டும் வள்ளல் என்ற பெயர் வந்தது.
உசிரம் என்றால் விழல் எனும் ஒரு வகை நாணல் செடி. விழல் செடிகள் மிகுந்து இருந்த காரணத்தால் விழல் நகர் எனப் பெயருற்று தற்போது மருவி விளநகர் என்றானது. இதன் காரணமாக ஸ்வாமிக்கு உசிரவனேஸ்வரர் என்ற பெயரும் வந்தது.
தேவாரத் திருத்தலம் - சப்த ஸ்தான ஸ்தலங்களுள் ஒன்று.