இவ்வாலயத்தின் எட்டெழுத்து சிறப்புகள்:
ஆதி சிவன், எட்டெழுத்துப் பெருமாள், சிவசுப்ரமண்யர், இளைய பெருமாள், பெரிய பிராட்டியார், ஆத்தியப்பர், தன விஷ்ணு விக்னேஸ்வரர், ஸ்ரீ ராம தூத பக்த வீர ஆஞ்சநேயர் ஆகிய எட்டு தெய்வங்கள் எழுந்தருளியுள்ளனர்.
ஸ்ரீ ராம தூத பக்த வீர ஆஞ்சநேயர் சந்நிதியின் கோபுரத்தில் அஷ்ட லட்சுமிகள் உள்ளனர்.
கோவிலின் வாசலில் இடதுபுறமாக மாயாண்டி சித்தரின் சமாதி இருக்கின்றது.
எட்டு நிலைகளிலும் சிறப்பாக இருக்கும் எட்டெழுத்துப் பெருமாள் கோவிலில் தர்மத்தை வளர்ப்பதால் இத்தலத்திற்கு தருமபதி எனப் பெயர் வந்தது.
காலையில் 4 மணிக்கெல்லாம் நடை திறக்கப்பட்டு, தன விஷ்ணு விக்னேஸ்வரரில் ஆரம்பித்து எட்டு தெய்வங்களுக்கும் அபிஷேகங்களை முடித்து 6 மணிக்கு முதல் பூஜை ஆரம்பமாகிறது. காலை 6 மணிக்கு அருள் வாக்கு நடைபெறும்.
பின்னர் வீர ஆஞ்சநேயருக்கும் மாயாண்டி சித்தருக்கும் அபிஷேக ஆராதனை செய்வார்கள். அடுத்து அவல் பிரசாத நைவேத்யம். அனைவருக்கும் படைத்து இரண்டாம் பூஜை நடக்கும். மாலை 6 மணிக்கு மூன்றாம் பூஜை.
திருமணி எனும் திருமுத்திரை பக்தர்கள் நெற்றியில் இடப்படுகிறது.