அருள்மிகு ஓங்காளீஸ்வரர் திருக்கோவில் (ஓங்காளீசம் - குத்தாலம்)

Primary Deity
ஓம் காளீஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
கரூர்
Contact Number
+91-Not Available

காளியின் வரத்திற்கு 'ஓம்' என்று அருளியதால் இறைவன் ஓம் காளீஸ்வரர் எனப் பெயர் பெற்றார். காளி தினமும் காவிரியில் நீராடி, மலர்களைப் பறித்து வந்து ஈஸ்வரனை அர்ச்சித்தாள். அப்போது பிரத்யட்சமான ஈஸ்வரன் 'ஓம்' எனும் பிரணவத்தின் பொருளை அருளிச் செய்ததால், இறைவன் ஓம் காளீஸ்வரர் என்ற பெயர் கொண்டதாக வரலாறு. இதனைக் குறிக்கும் வகையில் கல் திருமேனி ஒன்றும் மேடை மீது காணப்படுகின்றது.

மூலவர்: ஓம் காளீஸ்வரர்் அம்பாள்: ஆனந்தவல்லி.

மூலஸ்தானத்தில் ஸ்ரீ ஓம் காளீஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். காளியின் வரத்திற்கு 'ஓம்' என்று அருளியதால் இப் பெயர் கொண்டார். அம்பாள் ஆனந்தவல்லி தனி சந்நிதி கொண்டுள்ளார்.

சிவலிங்கத்தின் வலப்புறமாக காளி தேவி எழுந்தருளியுள்ளார். மேற்கரங்களில் டமருகம், பாசம் கொண்டும், இடது கீழ்க்கரத்தில் பூக்குவளை கொண்டும், வலது கீழ்க்கரத்தால் ஈஸ்வரனை அர்ச்சிக்கும் பாவனையிலும் காட்சி தருகின்றாள்.

காளி தினமும் காவிரியில் நீராடி, மலர்களைப் பறித்துக் கொண்டு வந்து, ஈஸ்வரனை அர்ச்சிக்கின்றாள். அப்போது பிரத்யட்சமான ஈஸ்வரன் 'ஓம்' எனும் பிரணவத்தின் பொருளை அருளிச் செய்ததால், இறைவன் ஓம் காளீஸ்வரர் என்ற பெயர் கொண்டதாக வரலாறு. இதனைக் குறிக்கும் வகையில் கல் திருமேனி ஒன்றும் மேடை மீது காணப்படுகின்றது.

கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ ஆராதனைகள் நடைபெறும். கடைசி ஞாயிறன்று சோழீஸ்வரர், மன்மதீஸ்வரர், ஓம் காளீஸ்வரர், உத்வேதீஸ்வரர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் காவிரி கரைக்கு எழுந்தருளுவார்கள். ஆதி கேசவப் பெருமாளும் கருட வாகனத்தில் வந்து சேருவார்.

காமேசம், வருணீசம், முனீசம், மன்மதீஸ்வரம், சோமசேகரம், ஆதி கேசவப் பெருமாள் கோவில் ஆகிய கோவில்களும் இவ்வூரில் உள்ளன.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...