ஸ்தல வரலாறு: முப்புரங்கள் கடுந்தீ பற்றி எரிந்தபோது, சுற்றிலுமுள்ள இடங்கள் எரிந்து, மண் சிவப்பு நிறமாக மாறியது. தீ ஜ்வாலையினால் பாதிப்பு ஏற்படாத இடம் ஒன்று வேண்டுமென முனிவர்கள் யாவரும் கோரிக்கை விடுத்தனர். அதனால் இந்த இடம் மட்டும் வேகாமல் நின்றது. ஆதலால் இத்தலத்தை வேகாக்கொல்லை என அழைக்கின்றனர். முப்புரங்களையும் எரித்த வீரட்டானேஸ்வரர் திருவதிகையருகே உள்ள இவ்வுரில் களைப்புத் தீர அமர்ந்தார். நந்திதேவர் தனது கால் குளம்பினால் பூமியைக் கீறி, நீர் ஊற்று ஒன்றினை உருவாக்கினார். களைப்பாறிய வீரட்டேஸ்வரர் என்ற பெயர் நாளடைவில் மருவி களப்பால வீரட்டேஸ்வரர் என்றானது.
அருள்மிகு களப்பால வீரட்டேஸ்வரர் ஆலயம் (வேகாக்கொல்லை)
Primary Deity
வீரட்டேஸ்வரர்
Temple Type
வீரட்டேஸ்வரர் கோவில்
Location
திருவள்ளூர்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் மூலவராக வீரட்டேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். அம்பாள் பெரியநாயகி எனப்படும் விசாலாட்சி தனி சந்நிதி கொண்டுள்ளார். மூலவரின் பின்புறமாக மகாவிஷ்ணு தரிசனம் தருகின்றார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.