ராவண சம்ஹாரம் முடித்து, சீதையை மீட்டு, சேது திரும்பிய ராமர், ராவணனைக் கொன்ற தோஷம் நீங்க சிவலிங்க
பூஜை செய்ய எண்ணி, ஹனுமனை அழைத்து ஒரு லிங்கம் கொண்டு வர பணித்தார்.
காசிக்கு சென்ற ஹனுமன், கால பைரவரோடு சண்டையிட்டு, பின்னர் சமாதானமாகி, லிங்கம் பெற்று வருவதற்குள்,
மணலால் லிங்கம் ஒன்றினை அமைத்து வழிபட்டார் ராமர். கோபம் கொண்ட ஹனுமன், அந்த மணல் லிங்கத்தை
தனது வாலால் கட்டி இழுக்க முற்பட, வால் அறுபட்டது.
அசரீரி வாக்குப்படி தலைஞாயிறு ஸ்தலம் சென்று தனது குற்றத்தைப் பொறுத்தருள வேண்டி நின்றார். செய்த சிவ
அபராதம் நீங்க, இவ்விறைவனை வழிபட்டார். அறுந்த வாலும் வளர்ந்தது.
இத்தலம் வந்து ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி, லிங்கப் பிரதிஷ்டை
செய்து வழிபட்டார் என ஸ்தல வரலாறு. ஹனுமன் வழிபட்ட ஸ்தலம் என்பதால், அவரது பெயராலேயே திருக்குரக்குக்கா
என அழைக்கப்பட்டது.
சித்திரை-வைகாசி மாதங்களில் இரண்டு குரங்குகள் இவ்வாலயத்திற்குள் வரும். ஒரு குரங்கு, வில்வமரத்தின் மீதேறி
வில்வ இலைகளை பறித்துப் போடும். மற்றைய குரங்கு, பறித்த வில்வ இலைகளை குந்தளேஸ்வரர் மீது தூவும். இந்த
அற்புத நிகழ்ச்சிகளை கண்ட ஊர் மக்கள் அதிசயிக்கின்றனர்.
தேவாரத்திருத்தலம்