ஸ்தல வரலாறு: சிவபெருமானை அழைக்காது தட்சன் நடத்திய யாகத்தை, தோன்றிய வீரபத்ரன் அழித்து துவம்சம் செய்தார். வந்திருந்த அனைவரும் உயிருக்கு பயந்து சிதறி ஓடிய நிலையில், தேவேந்திரன் கருங்குயில் உருவம் எடுத்து பறந்து விட்டான். பின்னர் இத்தலம் வந்து ஸ்வாமியையும், அம்பிகையையும் தினமும் வழிபட்டு, குயில் வடிவம் நீங்கி சுய உருவம் பெற்றான் என ஸ்தல வரலாறு. இதனால் இவ்வூர் கருங்குயில்நாதன்பேட்டை எனப் பெயர் கொண்டது. வாராஹி பூஜித்த ஸ்தலம். ஆலயத்தையொட்டி உள்ள கருணா தீர்த்தம் எனும் குளத்தில் மூழ்கி குளித்தால் தோல்நோய்கள் எதுவும் வராது என்று ஊர் மக்கள் கூறுகின்றனர்.
அருள்மிகு சக்திபுரீஸ்வரர் திருக்கோவில் (கர்ணாப்பேட்டை)
Primary Deity
சக்திபுரீஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சக்திபுரீஸ்வரர். கோகிலேஸ்வரர் என்றும் அழைப்பர். தேவேந்திரன் குயில் வடிவில் வழிபட்ட மூர்த்தம். கிழக்கு பார்த்த சந்நிதி. தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் அம்பாள் ஆனந்தவல்லி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். ஸ்வாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அமையப் பெற்ற சந்நிதிகளை மிஸ்ராலயம் என்றும் அகத்தீஸ்வரம் என்றும் ஆகம நூல்கள் கூறுகின்றன. சிவாலய கோஷ்ட மூர்த்தங்கள், வலச்சுற்றில் காணப்படும் பரிவாரத் தெய்வங்கள் யாவும் அழகாக உள்ளன. மண்டபத்தில் கணபதி, வள்ளி-தேவசேனா சமேத முருகன், சப்த மாதர்கள் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.