கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோவில்களுள் இதுவும் ஒன்று. சங்கு போன்ற அமைப்பிலுள்ளது. மஹாவிஷ்ணு இவ்விறைவனை வழிபட்டு பாஞ்சசன்யம் எனும் சங்கினைப் பெற்றதாக வரலாறு. சங்குப் பூக்கள் மலரும் தோட்டங்கள் மிகுந்து இருந்ததாலும், இவ்விறைவனுக்கு அம்மலர்களைச் சாத்துவதாலும், சங்கு வடிவில் கோவில் இருப்பதாலும் இவ்வூர் தலைச்சங்காடு (தலை-சங்கு-காடு) எனப் பெயர் பெற்றது. இறைவனுக்கு சங்காரண்யேஸ்வரர் எனும் திருநாமம் வந்தது.
இவ்வூரைப் பற்றி சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.