கண் பார்வையற்ற ஜமீன்தார் ஒருவரின் கனவில் தோன்றிய பெருமாள், தான் நெடுஞ்சாலையிலுள்ள அரசமரக் கிளையில் இருப்பதாகத் தெரிவித்தார்.
ஊர் மக்களின் துணையோடு சென்று பார்த்த ஜமீன்தார், அரசமரமருகே சென்றதும் ஒரு கண் பார்வை கிடைக்கப் பெற்று, மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்த பூக்குடலையைப் பார்த்தார். பூக்குடலையை இறக்கியதும் இரண்டாவது கண்ணின் பார்வையையும் பெற்றார். பூக்குடலைக்குள் இருந்த விக்ரகங்களை எடுத்து பிரதிஷ்டை செய்து வழிபடலானார்.
சாஸ்தா இடம் தந்ததால் இவ்வூர் சாத்தூர் என்றாயிற்று. சாஸ்தா கோவில் பூசாரியின் அருள்வாக்கு கூறிய இடத்தில் இவ்வாலயத்தை ஸ்தாபித்தார்கள். பெருமாளுக்கு சாத்தூரப்பன் என்ற திருநாமத்தைச் சூட்டினார்கள். வடக்கிலிருந்து பெருமாள் தெற்கே வந்தமையால் தென் திருப்பதி என அழைக்கின்றனர்.