ஸ்தல வரலாறு:
இவ்வூரிலுள்ள சித்தவடம் எனும் மடத்தில் ஓர் இரவு தங்கி தூங்கிக் கொண்டிருந்தார் சுந்தரர். முதியவர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்த சுந்தரரின் தலையில் தனது கால்களை தூக்கிப் போட்டார். இந்த செய்கை கூடாது எனக் கூறிய சுந்தரரிடம், தான் அசந்து தூங்கும்போது தன்னையும் அறியாமல் நடந்ததாக கூறினார். சிறிது நேரம் கழித்து மீண்டும் இச்செய்கை தொடர்ந்தது. இம்முறை சுந்தரர் வருத்தப்பட்டுக் கொண்டே "நீ யார்?" என வினவினார். "என்னைத் தெரியவில்லையா?" எனக் கேட்டு மறைந்தார் முதியவர்.
இத்தலம் சுந்தரருக்கு திருவடி தீட்சை அளித்த ஸ்தலமாகப் போற்றப்படுகிறது.