பாற்கடலைக் கடைந்தபோது முதன்முதலாக சங்கு தோன்றிய இடம் தலைச்சங்காடு. பின்னர் காமதேனு, தன்வந்த்ரி என ஒவ்வொன்றாக வந்தன. லட்சுமி தேவி தோன்றிய இடம் மாகுடி எனப்படும் மாமாகுடி ஆகும். மகாலட்சுமி பிறந்த இடம் மாகுடி என்றானது. இந்த நிகழ்வு நடந்த இடம் திருக்கடையூர். ஆகவே, இவ்வூர்களும் திருக்கடையூரைச் சுற்றியே அமைந்துள்ளதாகக் குறிப்பொன்று கூறுகின்றது.
ஆலயம் பழுதடைந்து சீர் செய்ய வேண்டிய நிலையிலுள்ளது.
தேவார வைப்புத்தலம்.