மெய்கண்ட நாயனாரின் முதன்மை மாணாக்கனான அருணந்தி சிவம் அவதரித்து பேறு பெற்ற ஸ்தலம்.
தென்பெண்ணையாறு வடதிசை நோக்கி ஓடும் ஸ்தலம்.
சுந்தரருக்கு காட்சி தந்தருளிய சிவபெருமான், கருவறையின் விமானத்தில் உள்ளார். இறைவனை தரிசிக்க முடியாது போனதால் ஏமாற்றமும் மன வருத்தமும் கொண்ட சுந்தரருக்கு, வயோதிகர் வடிவில் வந்து வழிகாட்டி மறைந்தார் இறைவன். கோபுரத்தில் அம்மையப்பராக காட்சி தந்து அருளாசி வழங்கினார் என ஸ்தல வரலாறு. சுந்தரரை தடுத்தாட்கொண்ட சந்நிதி குளத்தினருகே இருக்கின்றது.