ஸ்ரீ நடராஜரின் பஞ்ச ஸ்தலங்களான சிதம்பரம், செப்பறை, கரிசூழ்ந்தமங்கலம், கட்டாரிமங்கலம் மற்றும் மேலக்கருவேலங்குளம் ஆகிய ஐந்து ஊர்களிலும் உள்ள நடராஜர்களை ஒரே சிற்பி உருவாக்கியுள்ளான். அரசன் சுந்தரபாண்டியனின் மகள் பேசும் திறன் இல்லாது இருந்தாள். இவ்விறைவனை வழிபட்டு பேசும் திறன் பெற்றாள். இதனால் மகிழ்ச்சியுற்ற அரசன் இக்கோவிலைக் கட்டியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. இக்கோவிலின் அருகே பெரிய ஏரி ஒன்று உள்ளது. அருகேயுள்ள காட்டிலிருந்து தண்ணீர் பருக வரும் யானைக் கூட்டம் (கரி - யானை) சுற்றி சுற்றி வருவதால் இவ்வூருக்கு கரிவலம்வந்தநல்லூர் எனப் பெயர் வந்தது.
அருள்மிகு சுந்தரபாண்டீஸ்வரர் திருக்கோவில் (கரிவலம்வந்தநல்லூர்)
Primary Deity
சுந்தரபாண்டீஸ்வரர், ஆடல்வல்லான்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
கோவை
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான சுந்தரபாண்டீஸ்வரர். அழகிய லிங்கம். சப்தஸ்வர இசைத்தூண்களுடன் கூடிய மண்டபத்தில், ஆடல்வல்லான் எனப் போற்றப்படும் நடராஜப் பெருமான் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். கூத்தபிரானின் திருமேனியில் கன்னத்தில் கிள்ளப்பட்ட வடு ஒன்றைக் காணலாம். இது நடராஜரின் பஞ்ச ஸ்தலங்களுள் ஒன்றாகும்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.