அகலிகை மீது ஆசை கொண்டு, உடம்பெல்லாம் கண்ணாகும்படி சாபம் பெற்ற தேவேந்திரன், சாப விமோசனம் பெற, இத்தலம் வந்து சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, வழிபட்டான். மஹேந்திரன் வழிபட்டதால் இவ்வூர் மஹேந்திரப்பள்ளி எனப் பெயர் கொண்டது. கோயிலடிபாளையம் என்றும் கூறுவார்கள்.
தேவகுரு பிரகஸ்பதி இங்கு தங்கியிருந்து, தவமிருந்து வரங்கள் பல பெற்றான். இங்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு இந்திரனிடம் கூற, இந்திரனும் தேவசிற்பிகளைக் கொண்டு இவ்வாலயம் அமைத்ததாக ஸ்தல வரலாறு.
தேவாரத் திருத்தலம்.