ஹரி குடி கொண்ட ஸ்தலம் என்பதால் ஹரிகுடி எனப் பெயருற்று பின்னர் மருவி அரியக்குடி என்று அழைக்கப்படுவதாக கூறுவர்.
சிறுகுளத்துடையான் முருகன் செட்டியாரின் மகனான சேவுகன் செட்டியார் என்பவர், இறைபணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தவர். காணிக்கைகள் சேர்ந்த உண்டியலை சுமந்து கொண்டு திருப்பதியில் சேர்ப்பித்துவிட்டு வருவார்.
ஒரு சமயம் முதுமையின் காரணமாக நடக்கமுடியாமல் மயங்கி விழுந்து விட்டார். நீ இருக்குமிடத்திற்கு நானே தேடி வந்து சேவை சாதிக்கின்றேன் என அசரீரியாக பெருமாள் கூறிவிட்டார். அசரீரி வாக்குப்படி ராமாநுஜரால் ஆராதிக்கப்பட்ட நம்பெருமாள் விக்ரஹம் ஒன்று பூக்குடலை மூலமாக வந்து சேர்ந்தது. பெருமாள் குறிப்பிட்ட இடத்திலேயே கோவிலையும் கட்டி முடித்தார்கள்.
திருப்பதியிலிருந்து சடாரியும் திருமயத்திலிருந்து அக்னியும் கொண்டு வரப்பட்டதாக கோவில் குறிப்பொன்று தெரிவிக்கின்றது.