மணிமுத்தா நதி, வெள்ளாறு இரண்டும் இணைந்து ஓட, சரஸ்வதி அந்தர்வாஹினியாக கலக்குமிடமென்பதால் கூடலையாற்றூர் எனப்படுகிறது. திரிவேணி சங்கமமாக கருதப்படுகிறது.
பிரம்மா, சரஸ்வதி இருவரும் வழிபட்ட ஸ்தலம். பிரம்மா, சரஸ்வதி இருவருக்கும் நர்த்தன தரிசனம் தந்ததால், நர்த்தன வல்லபேஸ்வரர் எனப் பெயர் கொண்டார்.
சுந்தரர் விருத்தாச்சலம் செல்லும் வழியில், முதியவரின் வேடம் கொண்டு சென்ற இவ்விறைவன், இவ்வாலயத்திற்கு வழிகாட்டி, பின்னர் மறைந்து விட்டார் என ஸ்தல வரலாறு. அகஸ்தியர் தாம் கற்ற வித்தைகள் மறக்காமலிருக்க இவ்விறைவனை பிரார்த்தித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
தேவாரத் திருத்தலம்.