'பச்' என்ற சொல்லிலிருந்து 'பசு' எனும் சொல் பிறந்தது. 'கட்டப்பட்டது' என்று பொருள்.
உயிர்களின் மும்மலக் கட்டுக்களை விடுவித்து முக்தி அருளுபவரே பசுபதி எனப்படுவார்.
அம்பிகை பசு வடிவத்தில் அமைந்தவர் என்பதாலும் இவரைப் பசுபதி என்பர்.
இது மருள்நீக்கியார் எனப்படும் திருநாவுக்கரசர் அவதரித்த ஸ்தலம்.
இங்கு இனிப்பு, காரம், புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு ஆகிய அறுசுவைகளைக் கொண்ட இலைகளை உடைய களரிஉகாய் மரம் உள்ளது.