ஆறு உருவங்களாக தோன்றி ஒரே உருவமாக மாறிய முருகன், குழந்தையாக தொட்டிலில் வளர்ந்த ஸ்தலம் இது. இதனால் இவ்வூரை வளர்தொட்டில் என்று அழைத்தனர். காலப்போக்கில் மருவி விளத்தோட்டி என்றானது. குழந்தை முருகன் கோவில் என்றே பிரபலம்.
முருகன் குழந்தையாக தொட்டிலில் வளர்ந்ததால் இவ்வூர் மக்கள் தங்களின் குழந்தைகளை, பிறந்து 10 நாட்கள் வரை தொட்டிலில் போடுவதில்லை. (தூளியில்தான் போடுகிறார்கள்)