பூதகி எனும் அரக்கி, குழந்தை கிருஷ்ணருக்கு பாலூட்டும் சாக்கில் விஷம் கொடுக்க முனைந்தாள். அப்போது கிருஷ்ணர் பூதாகார உருவெடுத்து, பால் குடிக்கும் சாக்கில் அவளது உயிரைக் குடித்து விட்டார். அதனால் 'பூதநாராயணன்' எனப் பெயர் கொண்டார். அந்த வடிவத்தை இங்கு பிரதிஷ்டை செய்துள்ளனர். கிரிவலம் முடித்த பின், இங்கு வந்து தீர்த்தம் பெற்றுக் கொண்டு, வாசலின் முன்னால் அதைக் கொட்டி விடுகின்றனர். கிரிவலத்தில் அண்ணாமலையாரிடம் பெற்ற பலனை கிருஷ்ணருக்கு சமர்ப்பணம் செய்வதாக ஐதீகம்.
அருள்மிகு பூதநாராயணன் திருக்கோவில், திருவண்ணாமலை
Primary Deity
ஸ்ரீ கிருஷ்ணன் - மூலவர்் பூதநாராயணன் - உற்சவ மூர்த்தி
Temple Type
விஷ்ணு கோவில்கள் (பொது)
Location
திருவண்ணாமலை
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் பூதநாராயணனாக அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். 'குண்டு கண்ணன்' என்று செல்லமாக அழைக்கின்றனர். ஒரு கையில் சங்கு ஏந்தியும், மறு கையில் அபய முத்திரை கொண்டும் தரிசனம் தருகின்றார். ஸ்ரீ தேவி - பூ தேவி சகிதமாக பூதநாராயணன் உற்சவ மூர்த்தியாக சேவை சாதிக்கின்றார். மிகவும் அழகான திருவுருவங்கள். தும்பிக்கை ஆழ்வார், சிறிய திருவடி, பெரிய திருவடி, சக்கரத்தாழ்வார் ஆகிய மூர்த்தங்களை சேவிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.