காஞ்சிபுரத்து சிற்பி ஒருவன் மரத்தினால் கருடன் சிலை ஒன்றை உருவாக்கினான். சிலை தத்ரூபமாக அமைந்து பறக்கத் தொடங்கியதாம். சிற்பி உளியை அதன் மீது வீசி இறக்கையை பின்னப்படுத்தினான். காயம்பட்டதால் மேற்கொண்டு பறக்க இயலாமல், 'மதுசூதனா' என்று கத்தியபடி இத்தலத்து குளத்தருகே வந்து வீழ்ந்தது. அந்த அழகிய மரச்சிலைதான் இங்கு பூஜிக்கப்படுகிறது.
அடிபட்ட பறவை இறக்கை வலியுடன் வந்து இறங்கியதால் இவ்வூர் 'பறக்கை' எனப் பெயர் கொண்டது. மது எனும் அசுரனை வதம் செய்த திருமாலுக்கு 'மதுசூதனன்' என்று பெயர் வந்தது.