அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோவில்

Primary Deity
மாணிக்கவண்ணர்
Temple Type
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Location
கரூர்
Contact Number
+91-Not Available

பாண்டவர்கள் ஐவரும் இலுப்பைப்பட்டில் லிங்கங்கள் அமைத்து வழிபட்டுக் கொண்டிருந்த சமயத்தில், இத்தலம் வழியே பயணித்த அர்ஜுணன் தாகத்தால் தவித்தான். அப்போது அவனது எதிரில், வயோதிகர் வடிவில் வந்த இறைவன், வாகை மரத்தடியில் நல்ல நீர் கிடைக்கும் என்று அர்ஜுணனிடம் கூறிவிட்டு அவனது கை வாளை வாங்கிக் கொண்டார். அவன் திரும்பி வருவதற்குள் வாளை அருகிலிருந்த புதர் ஒன்றில் ஒளித்து வைத்து விட்டு மறைந்தார். காவலாக வாசுகியை வைத்தார்.

பின்னர் அர்ஜுணன் பக்தி சிரத்தையுடன் வழிபட்டு, தொலைந்த வாள் மீண்டும் கிடைக்க வேண்டியதால் வாளை புதரிலிருந்து வெளிப்படுத்தினார். இதனால் இவ்வூர் வாள் ஒளி புற்றூர் எனப் பெயர் கொண்டது. புற்றில் இருந்தபடி வாசுகி வழிபட்டதால் ஸ்வாமிக்கு ஆபரணம் ஆகும் பேறு பெற்றது என ஸ்தல வரலாறு கூறுகிறது.

மூலவர்: மாணிக்கவண்ணர், அம்பாள்: வண்டமர் பூங்குழலி.

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக மாணிக்கவண்ணர் எழுந்தருளியுள்ளார். ரத்னபுரீஸ்வரர் என்றும் திருநாமம் உண்டு.

விஷ்ணுமூர்த்தி மாணிக்கத்தை வைத்து பூஜித்ததால் இப்பெயர் கொண்டார். மாணிக்க மழையை பொழிவித்ததாலும் இப்பெயர் வந்ததாக கூறுவர். சுயம்பு மூர்த்தம். கிழக்கு பார்த்த சந்நிதி.

அம்பாள் வண்டமர் பூங்குழலி அழகே உருவாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். பிரம்ம குந்தளாம்பிகை என்றும் அழைப்பார்கள்.

நிருதி விநாயகர், இரட்டை பைரவர், குருஸ்தானமுடையார், குருமுகநாயகி, சட்டநாதர், வாசுகி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். அஷ்டநாகங்கள் மத்தியில் விநாயகர், இடது கையில் கிளியுடன் அஷ்டபுஜ துர்க்கை சிம்ம வாஹினியாக தரிசனம் தருவது சிறப்பானது.

இரண்டு சண்டிகேஸ்வரர்கள் இருப்பது விசேஷம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...