முருகப் பெருமானின் வேலாயுதம் பட்டதால் மூன்று துண்டுகளாக சிதறிய கிரௌஞ்ச அசுரனின் மலை வடிவத்தின் தலை பாகமே வள்ளியூர் குன்றம் எனும் மலை. மகேந்திரகிரியின் கிழக்கே உள்ளது.
முருகப் பெருமான் கிழக்கு முகமாய் நின்று, அகஸ்தியருக்கு நான்கு வேதங்களை உபதேசம் செய்த ஸ்தலம். பிரம்ம ஞான உபதேசத்தை நாரத முனிவர்க்கு முருகப் பெருமான் வழங்கிய ஸ்தலம் என்பர்.
நம்பிராஜன் மகளான வள்ளியை குமரன் மணம் புரிந்த ஸ்தலம். இவ்வூரினருகே நம்பி மலை, நம்பியாறு, நம்பியான் விளை ஆகிய இடங்களைக் காணலாம்.
சிங்கமுகன், தாரகன், சூரபத்மன் ஆகிய மூவரின் மாயையின் வடிவம் கொண்ட தாராசுரனை முருகன் சம்ஹாரம் செய்த இடம் என்பார்கள்.
தேவ வடிவமாயிருந்த முருகப் பெருமானை, பிம்ப வடிவமாக இங்கு கோவில் கொள்ளுமாறு தேவேந்திரன் வேண்டியதன் பேரில், காட்சி தந்தார் எனக் கூறப்படுகிறது.