சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் எனும் மூன்று அசுரர்கள் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்தனர். அசுரர்களுக்கு பயந்து இத்தலத்தில் ஒளிந்திருந்த தேவர்களைக் கண்டுபிடித்து இம்சை செய்தனர். இதைக் கண்டு அஞ்சிய தேவர்கள் இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள இறைவனையும் இறைவியையும் துதித்து சரணடைந்தனர்.
சிவபெருமான் தன்னிலிருந்து ஒரு குமாரனைத் தோற்றுவித்தார். பைரவர் கோலத்தில் நின்ற அந்த குமரன் கணபதியையும், நந்தியையும் அழைத்துக்கொண்டு போய் போரிட்டு அசுரர்களை அழித்தார் என ஸ்தல வரலாறு.
பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும், சிவபெருமான் இங்கு ஜோதி வடிவாகக் காட்சி தந்ததால் வளர் ஒளிநாதர் என்ற பெயரைக் கொண்டார். கார்த்திகை மாதம் சம்ஹார சஷ்டி கொண்டாடுகின்றனர். பைரவர் சூலாயுதம் கொண்டு உருவாக்கிய தீர்த்தம் வைரவன் தீர்த்தம் எனப்படுகிறது.
தினமும் காலை வேளைகளில் பைரவருக்கு விசேஷ ஹோமங்கள் நடைபெறுகின்றன. ராகு கால ஹோமம் (4.30 - 6.00) நடக்கிறது.
ஒன்பது நகரத்தார் கோவில்களுள் ஒன்று.