இக்கிராமத்தில் புதர் மண்டியிருக்கும் பகுதி ஒன்றில் புற்றுருவாக, பாம்பு வடிவாய் எழுந்தருளியுள்ள கருநாக ரூபிணிக்கு பசு ஒன்று தினமும் பால் சுரந்து வந்தது. மேல் மலையனூர் அங்காளம்மன் பக்தர்களுக்காக இங்கு வந்திருப்பதாக, பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய விஷயத்தை செயல்படுத்தி இக்கோவில் கட்டப்பட்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
அம்மனின் குங்குமம் - மஞ்சள் காப்பினை சுமங்கலிப் பெண்கள் தங்களது மாங்கல்யத்துடன் சேர்த்துக் கொள்கின்றனர். மசானக்கொள்ளை பூஜையை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
பல்வேறு குலத்தை சேர்ந்தவர்கள் இவளை குலதெய்வமாக ஏற்று வழிபடுகின்றனர். தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு முத்துசாமி என்றும் முத்தம்மாள் என்றும் பெயர் வைக்கின்றனர்.