சிவபெருமானுக்குரிய அவிர்பாகத்தை அளிக்காமல் அவரை அவமதிக்கும் பொருட்டு, தட்சனால் நடத்தப்பட்ட யாகத்தைத் தடுக்க திருப்பறியலூர் வந்த தாட்சாயிணியை அவமதித்து அனுப்புகிறான் தட்சன். சிவநிந்தை புரிந்தவனின் மகள் என்ற இழிச்சொல் நீங்கவும், தோஷம் போகவும் இவ்வூர் வந்தடைந்து, பஞ்சாக்னி வளர்த்து தவம் புரிந்தாள் தாட்சாயிணி. அவளை மன்னித்து மருவார் குழலியாக ஏற்றுக்கொண்டார் ஸ்வர்ணபுரீஸ்வரர்.
விருத்தாசுரனைக் கொல்ல இந்திரன் வழிபட்ட இறைவன் இருக்கும் ஸ்தலம். தாராசுரனை வதம் செய்ய சுப்ரமண்யர் இவ்விறைவனை வழிபட்டுள்ளார். தட்சனை வதைக்க வீரபத்ரர் தோன்றிய இடம்.
கார்த்திகை சோம வாரங்களில் நடக்கும் 108 சங்காபிஷேகமும், ஐப்பசி மாத பௌர்ணமியில் நடக்கும் அன்னாபிஷேகமும் இங்கு பிரசித்தம். இவ்வூர் பெண்கள் புதிய நகைகள் வாங்கினால், இங்குள்ள அம்பாளுக்கு அணிவித்து அழகு பார்த்து பின்னரே தாங்கள் அணிந்துகொள்வார்களாம்.
தேவாரத் திருத்தலம்.