மூலவர்: ஐந்நூற்றீஸ்வரர், அம்பாள்: பெரியநாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஐந்நூற்றீஸ்வரர். சதுரமான ஆவுடையாரில் உயரமான பாணம் கொண்டு கம்பீரமாக காட்சி தருகின்றார். இவருக்கு ஐனுதீஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு.
தெற்கு பார்த்த சந்நிதியில் பத்ம பீடத்தில் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றாள் அன்னை பெரியநாயகி.
வல்லப கணபதியின் எழில் உருவம் அபூர்வமானது. துதிக்கையில் மெல்லிய சுருக்கங்கள் வரிவரியாக உள்ளன.
அழகான திருமேனியுடன் ஆறுமுகப் பெருமான் - அமர்ந்துள்ள மயில் - மயில் கவ்வியுள்ள பாம்பு - அந்த பாம்பு எடுக்கும் படம் என அனைத்தையும் அழகாக சித்தரிக்கும் சிற்பம் அரிய படைப்பு.
சிங்க பீடத்தில் அமர்ந்த நந்தியம்பெருமான், நடராஜர், முழுக்க முழுக்க வெள்ளைக் கற்களால் உருவான சண்டிகேஸ்வரர் சந்நிதி ஆகியன விசேஷ கவனத்துடன் உருவாக்கியுள்ளனர்.
சிங்க சிற்பத்தின் வாய்க்குள் உருளும் உருளை கருங்கல் பந்துக்கள் 30 செ.மீ சுற்றளவு, வாய் 60 செ.மி அகலம். அவற்றை வெளியே எடுக்க முடியாது.
மகிழ மரத்தில் ஐக்கியமாகியுள்ள முனீஸ்வரருக்கு யந்திர பிரதிஷ்டை செய்து சூலமும் கதாயுதமும் வைத்து வழிபடுகின்றனர்.
ஒன்பது நகரத்தார் கோவில்களுள் ஒன்று.