ஆதியில் வில்வாரண்யம் என்றழைக்கப்பட்ட ஸ்தலம். பராசர மகரிஷி பூஜித்து வழிபட்ட ஸ்தலம். கலி (துன்பம்) நீக்கும் இறைவனின் ஆளுமைக்குட்பட்ட ஊர் என்பதால் திருக்கலிக்காமூர் எனப் பெயர் கொண்டது.
தனது தந்தையைக் கொன்ற அசுரனை அழிக்க பெரிய யாகம் ஒன்றை செய்கின்றார் பராசர முனிவர். அந்த யாகத்தில் கிடைத்த பலனைக் கொண்டு அசுரனை அழிக்கின்றார். அசுரனை அழித்த தோஷம் நீங்க, இவ்விறைவனை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார் என ஸ்தல வரலாறு.
தீராத வயிற்று வலி கொண்டு அவதியுற்ற வணிகன் ஒருவன், சிவஸ்தலங்களுக்கு யாத்திரை போய்க் கொண்டிருந்த வேளையில் இத்தலம் வந்து, ஸ்வாமியையும், அம்பாளையும் வழிபட்டான். அவனது வயிற்று வலி நீங்கி பூரணமாக சுகமடைந்தான்.
தேவாரத்திருத்தலம்