சப்த ராஜ நாகங்களுள் ஒருவனான கார்க்கோடகனாகிய சர்ப்பராஜன், தான் கொண்ட சாபத்திலிருந்து விடுபட, இத்தலத்தில் பத்மசரஸ் எனும் தீர்த்த தடாகம் அமைத்து, அதன் கரையில் சிவலிங்கம் ஒன்றினை பிரதிஷ்டை செய்து, தாமரை மலரால் அர்ச்சித்து வழிபட்டான். அவனது வழிபாட்டில் மகிழ்ந்து பிரத்யட்சமான இறைவன் அவன் கோரிய வரங்களை அருளினார்.
கார்க்கோடகன் வழிபட்ட ஸ்தலம் என்பதால், இவ்வூர் கார்க்கோடக்குடி என அழைக்கப்பட்டு, காலப்போக்கில் கோடங்குடி என்றானது.