அருள்மிகு பெருவேம்புடையார் திருக்கோவில் (தளபதி சமுத்திரம்)

Primary Deity
மூலவர்: பெருவேம்புடையார்் உற்சவர்: ஐயப்பன்
Temple Type
திருக்கழுக்குன்றம் கோவில்
Location
கரூர்
Contact Number
+91-Not Available

Information not available.

பெரிய மதிற்சுவர்கள், கோட்டைக்கதவுகள் கொண்ட அகன்ற நுழைவாசல், தூண்கள் மற்றும் திண்ணைகளுடன் கட்டப்பட்ட கோவில்.

மூலஸ்தானத்தில் பெருவேம்புடையார் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். சுயம்பு மூர்த்தம். பூரணி புஷ்கலை தேவியர்கள் இருபுறமும் உள்ளனர். ஐம்பொன்னாலான உற்சவ மூர்த்தியாக ஐயப்பன் எழுந்தருளி தரிசனம் தருகின்றார்.

சுவாமி சந்நிதிக்கு வலப்புறமாக பூதநாதர்கள் இருவரும் உள்ளனர். பூதத்தான் பாதமருகே லாட சந்நியாசியும், மணி மண்டபமருகே வாளுடன் கருப்பசாமியும், வடுக பைரவரும் காட்சி தருகின்றனர்.

மகா மண்டபத்தின் நான்கு மூலைகளிலும் யானை சிற்பங்கள், கணபதி, தர்ம சாஸ்தா, சுப்ரமண்யர் திருவுருவங்கள் காணலாம். வடமேற்கு மூலையில் முனிவர் ஒருவரின் சமாதி அதிஷ்டானமாக லிங்க வடிவில் காணப்படுகிறது.

அரச மரத்தடியில் மகா கணபதியும் காவல் தெய்வமான தளவாய் சுவாமியும் தரிசனம் தருகின்றனர். பூதநாதர்கள் சந்நிதி எதிரே யக்ஷிணியும், செல்லப்பிள்ளையும் குடி கொண்டுள்ளனர். சாமி ஆடி குறி சொல்லும் சம்பிரதாயம் இங்கு இருக்கின்றது.

ஸ்ரீ பெருவேம்புடையார் சாஸ்தா மிகுந்த வரப்பிரசாதி. புத்திர பாக்கியம் அளிக்கும் சந்தான மூர்த்தியாகவும், பலருக்கு குல தெய்வமாகவும் விளங்கும் இவரது கோவிலில் சாந்நித்யமும் சைதன்யமும் இருக்கின்றது.

சிவகாம முறைப்படி அமைக்கப்பட்ட ஐந்து நிலை கோபுரம்.

வெளி மண்டபத்திலிருந்து உற்சவர் வெளி உலா கிளம்புவார். குதிரை வாகனத்தில் வேட்டைக்குச் செல்லும் காட்சி நன்றாக இருக்கும்.

கோவிலுக்கு வெளியே மாடசாமி - மாடத்தி கோவில், வன்னியர் கோவில் போன்ற காவல் தெய்வங்கள் கோவில் கொண்டுள்ளனர்.

வாய்க்கால் கரை ஓரமாக மருதவல்லித் தாயார் கோவில் உள்ளது. நீர்சல மாடன் கோவில், திரு நாகேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களும் உள்ளன.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...