துர்வாசரின் சாபத்திற்குள்ளான பிரம்மனும் சரஸ்வதியும் இத்தலம் வந்து ஆங்கிரஸ முனிவரின் ஆஸ்ரமத்தை வந்தடைந்தனர். அங்கு லிங்கத் திருமேனி ஒன்றை அமைத்து வழிபட்டு, சாபம் நீங்கப் பெற்று மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு வந்த கோடி ருத்ரர்கள் வழிபட்ட லிங்கமே இங்கு மூலவராகக் காட்சி தருகின்றார்.
மட்டிப்பால் தரும் மரங்கள் மிகுந்து காணப்பட்ட பகுதி என்பதால் மட்டியூர் என்றழைக்கப்படுகிறது. ஆதியில் இது சதுர்வேத மங்கலம் என அழைக்கப்பட்டது.