'குத்தன்' எனும் சொல் எருது வாகனன் எனப்படும் சிவபெருமானைக் குறிப்பதாகும். குத்தன் எழுந்தருளியுள்ள ஊர் குத்தங்குடி எனப் பெயர் பெற்றது. சுயம்பு லிங்கமானது நாகலோகத்திலிருந்து செங்குத்தாக இறங்கி வந்ததால் இவ்வூர் குத்தங்குடி எனப் பெயர்பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இது ஒரு தேவார வைப்புத்தலம்.