பசு மந்தை நாட்கணக்கில் தங்கிய இடம் என்பதால் 'மந்தை' எனப் பெயருற்று, பின் நாளடைவில் 'மாந்தை' என்றானதாம்.
பசு மந்தையை மேய்த்து வந்த ஆமருவியப்பன், இங்கு ஸ்ரீ நிவாசனாக சேவை சாதிக்கின்றார். சிவபெருமான் ரிஷப வடிவம் எடுத்துக் கொண்டு பசுக்கூட்டங்களோடு சேர்ந்து கொண்ட ஸ்தலம்.
மாட்டுப் பொங்கலன்று மாலை ஸ்ரீ நவநீத நர்த்தன கிருஷ்ணன் விக்ரஹம் வீதி உலா புறப்பட்டு நேர்கிழக்கேயுள்ள சிவாலயம் வரை செல்வார். (ஒரு கி.மீ. தூரம்) சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் பசுக்களை ஓட்டிக் கொண்டு கூடவே வருவார்கள். கண்ணன் பசுக்களை மேய்த்துக் கொண்டு போவதாக ஐதீகமாக காட்டுகின்றனர்.
மாலை மரியாதைகளுடன் சௌந்தரேச்வரர் வந்து எதிர் கொண்டு அழைத்து, பதில் மரியாதைகளைப் பெற்று செல்வார்.