லக்ஷ்மணன், ஹனுமன் உட்பட ராமரது படையை நாக பாசத்தால் கட்டிப் போட்டான் இந்திரஜித். இந்த நாகபாசம் தானே விட்டால்தான் நீங்கும். கருடாழ்வார் தனது வலிமையால் நாகபாசத்தை முறியடித்து அனைவரையும் விடுவித்தார்.
இதனால் இங்கு கருடனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
கருடன் வழிபடும் இந்த ராமஸ்வாமி கோவில் நாகதோஷம் நீக்கும் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
இக்கோவில் அமைந்துள்ள சந்நிதி தெருவின் முதல் வீடே மகாகவி பாரதியார் வாழ்ந்த வீடு. அவரது மனைவி செல்லம்மாள் பிறந்த இல்லம் இது. "காணி நிலம் வேண்டும்" என்ற பாடலில் இடம் பெற்ற காணி நிலம் இந்த வீட்டை அடுத்து உள்ளது.
பாரதியார் அடிக்கடி ராமனை தரிசிப்பார். ஸ்ரீ ராம நவமி பஜனைகளில் கலந்து கொண்டு பாடுவார். "சாகாவரம் வேண்டும்" என்ற பாடல் குறிப்பிடத்தக்கது.