வியாக்ரபாத முனிவருக்குக் காட்சி தந்த இறைவன் என்பதால், இத்தல இறைவன் ஸ்ரீ வியாக்ரபாதர் எனப் பெயர் பெற்றார். ஒரு வேடன் மரத்தை வெட்டும்போது சுயம்புவாக வெளிப்பட்டவர். வெட்டுக் காயங்கள் லிங்கத் திருமேனியில் இன்றும் காணப்படுகின்றன. வீரட்டநாதரைப் பாடிவிட்டுச் சென்ற நால்வரிடம் வாதாடி, இந்த மூலவருக்காகப் பாடல் பெற்ற விநாயகர் என்பதால், இவர் வாதாடும் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
இது ஒரு தேவார வைப்புத் தலம்.