தேனாற்றில் மிதந்து வந்த சிலையை, மோர் விற்கும் பெண் ஒருத்தி பார்த்துவிட்டு ஊர் மக்களுக்குத் தெரியப்படுத்தினாள். ஊர் மக்கள் அதை எடுத்து பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பினார்கள் என்று கூறப்படுகிறது.
கோவிலைச் சுற்றி ஊர் உருவானதால், இவ்வூருக்கு தேனாட்சி அம்மன் கோவில் என்றே பெயர் பெற்றது.