அருள்மிகு திருமேனியழகர் திருக்கோவில் (திருமஹேந்திரப்பள்ளி)

Primary Deity
திருமேனியழகர்
Temple Type
விஷ்ணு கோவில்கள் (பொது)
Location
திருவள்ளூர்
Contact Number
+91-Not Available

அகலிகை மீது ஆசை கொண்டு, உடம்பெல்லாம் கண்ணாகும்படி சாபம் பெற்ற தேவேந்திரன், சாப விமோசனம் பெற, இத்தலம் வந்து சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, வழிபட்டான். மஹேந்திரன் வழிபட்டதால் இவ்வூர் மஹேந்திரப்பள்ளி எனப் பெயர் கொண்டது. கோயிலடிபாளையம் என்றும் கூறுவார்கள்.

தேவகுரு பிரகஸ்பதி இங்கு தங்கியிருந்து, தவமிருந்து வரங்கள் பல பெற்றான். இங்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு இந்திரனிடம் கூற, இந்திரனும் தேவசிற்பிகளைக் கொண்டு இவ்வாலயம் அமைத்ததாக ஸ்தல வரலாறு.

தேவாரத் திருத்தலம்.

மூலவர்: திருமேனியழகர், அம்பாள்: வடிவாம்பிகை.

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் திருமேனியழகர். சுயம்பு லிங்கம். சோமசுந்தரரே இங்கு தரிசனம் தருவதாக கூறுவார்கள். பங்குனி 1 முதல் 7 வரை சூரியனின் ஒளிக் கதிர்கள் இறைவன் மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன.

அம்பாள் வடிவாம்பிகை தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். முல்லைநகை வடிவம்மை என்றொரு பெயர். ஸ்வாமி-அம்பாள் இருவரும் கொள்ளை அழகுடன் இருப்பதால் திருமேனியழகர் என்றும் வடிவாம்பிகை என்றும் போற்றுவர்.

ராகு-கேது ஆகிய சர்ப்பங்கள் இருபுறமிருக்க நடுவே விநாயகப் பெருமான் அமர்ந்து தரிசனம் தருகின்றார். ஸ்ரீ வேத விநாயகர், வள்ளி-தெய்வயானை உடனாய முருகன், விசாலாட்சி சமேத விஸ்வநாதர், மீனாட்சி சகித சுந்தரேஸ்வரர், சூரிய-சந்திரர்கள், கால பைரவர், சனீஸ்வரர் ஆகிய மூர்த்தங்களை பிரகார வலச்சுற்றில் காணலாம். சண்டிகேஸ்வர் அவரது மனைவியுடன் தரிசனம் தருகின்றார்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...