அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோவில் (அரியக்குடி)

Primary Deity
மூலவராக திருவேங்கடமுடையான், உற்சவர் ஸ்ரீநிவாசப் பெருமாள்
Temple Type
திருக்கழுக்குன்றம் கோவில்
Location
தஞ்சாவூர்
Contact Number
+91-Not Available

ஹரி குடி கொண்ட ஸ்தலம் என்பதால் ஹரிகுடி எனப் பெயருற்று பின்னர் மருவி அரியக்குடி என்று அழைக்கப்படுவதாக கூறுவர்.

சிறுகுளத்துடையான் முருகன் செட்டியாரின் மகனான சேவுகன் செட்டியார் என்பவர், இறைபணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தவர். காணிக்கைகள் சேர்ந்த உண்டியலை சுமந்து கொண்டு திருப்பதியில் சேர்ப்பித்துவிட்டு வருவார்.

ஒரு சமயம் முதுமையின் காரணமாக நடக்கமுடியாமல் மயங்கி விழுந்து விட்டார். நீ இருக்குமிடத்திற்கு நானே தேடி வந்து சேவை சாதிக்கின்றேன் என அசரீரியாக பெருமாள் கூறிவிட்டார். அசரீரி வாக்குப்படி ராமாநுஜரால் ஆராதிக்கப்பட்ட நம்பெருமாள் விக்ரஹம் ஒன்று பூக்குடலை மூலமாக வந்து சேர்ந்தது. பெருமாள் குறிப்பிட்ட இடத்திலேயே கோவிலையும் கட்டி முடித்தார்கள்.

திருப்பதியிலிருந்து சடாரியும் திருமயத்திலிருந்து அக்னியும் கொண்டு வரப்பட்டதாக கோவில் குறிப்பொன்று தெரிவிக்கின்றது.

மூலஸ்தானத்தில் திருவேங்கடமுடையான் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். சுயம்பு மூர்த்தம். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். உற்சவர் ஸ்ரீநிவாசப் பெருமாளின் திருவுருவம் அழகாக இருக்கிறது. தாயார் அலர்மேல்மங்கை தென்புறமாக தனி சந்நிதி கொண்டுள்ளார்.

மஹா மண்டபத்தில் ஆண்டாள், சேனை முதலியார், விஷ்வக்சேனர் ஆகியோரை சேவிக்கலாம். கல் கருடன் சந்நிதியில் இருபுறமும் சிம்மங்களுடன் கருடாழ்வார் காணப்படுகிறார். ஸ்ரீ ராமர், சக்கரத்தாழ்வார் ஆகியோரை சேவிக்கலாம். சொர்க்கவாசல், ஏகாதேசி மண்டபம் ஆகியன தரிசிக்கலாம்.

ஸ்வாதி நட்சத்திரத்தன்று மூலைக் கருடனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். திருமஞ்சனம் செய்து வெள்ளிக்கவசம் அணிவிப்பார்கள்.

சித்திரையில் தங்க கருட வாகன புறப்பாடு. வைகாசிப் பெருவிழா 14 நாட்கள் - தேரோட்டம், தெப்பம் ஆகிய திருவிழாக்களை கண்டு களிக்கலாம். வெள்ளிக் கிழமைகளில் தாயாருக்கும், திருவோண நட்சத்திர நாட்களில் பெருமாளுக்கும் திருமஞ்சனம் செய்வார்கள்.

தசாவதாரக் காட்சிகளைக் கொண்ட தூண்கள், ராமாயண மஹாபாரதக் காட்சிகளைக் சுதைச் சிற்பங்களாகக் கொண்ட கோபுரம் ஆகியன அவசியம் தரிசிக்க வேண்டியவை.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...