பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்கும் பணியிலிருந்த தேவர்களும், அசுரர்களும் மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் பயன்படுத்தினர். அப்போது கனம் தாங்காமல் மந்தாரமலை மூழ்கத் தொடங்கியது. அது மூழ்காமல் இருக்க திருமால் ஆமை வடிவம் எடுத்து, மலையின் அடிப்பாகம் சென்று தாங்கிப் பிடித்தார்.
அதை தாங்கும் வலிமையை தனக்கு தர வேண்டும் என இவ்விறைவனை பூஜித்தார். கச்சபம் (ஆமை) வழிபட்டதால் கச்சபூர் எனப் பெயர் கொண்டு, நாளடைவில் மருவி கச்சூர் என்றானது.
ஒவ்வொரு ஸ்தலமாக சென்று இறைவனை தரிசித்து வரும் யாத்திரையில் இவ்வூருக்குள் வரும்போது உச்சி வேளை. வெயிலின் கொடுமையோடு பசி வேறு சேர்ந்து கொண்டது. கோவில் வாசலுக்கு எதிரே வெளியில் ஒரு பதினாறு கால் மண்டபம் உள்ளது. அந்த மண்டபத்து தூண் ஒன்றில் சாய்ந்து கொண்டார் சுந்தரர்.
ஒரு பெரியவர் சுந்தரரிடம் வந்து "நீ யார்? இங்கு எதற்காக வந்தாய்?" போன்ற பல கேள்விகளைக் கேட்டார். மயக்கத்திலிருந்த சுந்தரர் பதிலேதும் கூறவில்லை. நிலைமையை புரிந்து கொண்ட பெரியவர், ஓடிப் போய் சோற்று மூட்டையுடன் வந்து, சுந்தரருக்கு சோறு போட்டார். பசியாறிய பின் சுந்தரர் பெரியவரை தேட, பெரியவர் மறைந்து விட்டார். பெரியவர் வடிவில் வந்தவர், சுந்தரருக்கு பெரியவர் வடிவில் வந்து சோறு போட்டவரே விருந்திட்டீஸ்வரர் ஆவார்.
தேவாரத்திருத்தலம்் உபய விடங்கத் தலங்களுள் ஒன்று.