அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோவில் (திருவாய்மூர்)

God Name : வாய்மூர் நாதர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

ஸ்தல வரலாறு: வேதாரண்யத்தில் ஓர் மடத்தில் தூங்கிக் கொண்டிருந்த அப்பர் பெருமானின் கனவில் தோன்றிய இறைவன், "வாய்மூருக்கு என்னைத் தொடர்ந்து வா" என்று அழைத்தார். வெண்ணீறு அணிந்த திருமேனி கொண்டவனாக தோன்றிய இறைவன், மெதுவாக நடந்து சென்றுகொண்டிருக்கையில், ஞானசம்பந்தரும் இவர்களைப் பின்தொடர்ந்தார். வெண்ணீறு அணிந்த திருமேனியுடையவன் கோவிலுக்குள் சென்று மறைந்து விட்டான். அப்பரும் ஞானசம்பந்தரும் சேர்ந்து பதிகம் பாடினார்கள். இறைவன் அவர்களிருவருக்கும் தரிசனம் தந்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. இது சூரியன் வழிபட்ட ஸ்தலம். செவ்வாய் தோஷம் போக்கவல்ல ஸ்தலம்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் வாய்மூர்நாதர். இவர் சுயம்பு மூர்த்தம். தேஜோமயமான அழகிய சிவலிங்கம். அம்பாள் பாலிலும் நன் மொழியாள் வடக்கு பிரகாரத்தில் தனி சந்நிதி கொண்டுள்ளார். பங்குனி மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் சூரியனின் ஒளி சுவாமி மீதும் அம்பாள் மீதும் படர்ந்து சூரிய பூஜை நடைபெறுகிறது. கருவறையின் வடபுறத்தில் வேதாரண்யேஸ்வரர் சந்நிதி உள்ளது. தெற்கு பிரகாரத்தில் தியாகராஜரின் சபை உள்ளது. இதில் எழுந்தருளியிருப்பவர் நீல விடங்கர். இவர் ஆடுவது கமல நடனம் - அதாவது குளத்திலுள்ள தாமரை மலர், தென்றல் வீசுவதற்கேற்ப ஆடும் பாவனை. நீல ரத்தினக்கல் லிங்கம் மற்றும் உயர்வகை ஸ்படிகக் கல்லில் உருவான ஸ்படிக லிங்கம் இந்த சந்நிதியில் பூஜிக்கப்பட்டு வருகின்றன. உமா மகேஸ்வரர், காரைக்கால் அம்மையார் ஆகிய சிற்பங்களும் கோஷ்ட மூர்த்தங்களும் அழகாக இருக்கின்றன. ஏழு பைரவ மூர்த்திகள் இத்தலத்தில் உள்ளனர். இத்தலம் சப்த விடங்க ஸ்தலங்களுள் ஒன்றாகப் போற்றப்படுகிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.