அருள்மிகு ஆதிநாத மஹாசாஸ்தா ஆலயம் (காடந்தேத்தி)

God Name : ஆதிநாத மஹாசாஸ்தா எனப்படும் அவிமுக்தேஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

காடன் எனும் அசுரனை போரில் வென்று தனது சாட்டையால் தூக்கி எறிந்தார் சாஸ்தா. இத்தலத்தில் வந்து விழுந்தான் காடன். மனம் திருந்திய காடன், சாஸ்தாவை வழிபட்டு அவருடைய கணத் தலைவன் பதவியைப் பெற்றான். காடனைத் திருத்திய ஸ்தலம் என்பதால் காடந்திருத்தி எனப் பெயர் கொண்டு, பின் மருவி காடந்தேத்தி என்றானது. லாடமூர்த்தி எனும் பரம பக்தனுக்கு கல்யாணக் கோலம் காட்டியருளிய ஸ்தலம். நாரதர், சுகர் மற்றும் அஷ்டதிக் பாலகர்கள் வழிபட்ட சாஸ்தா இங்கு பெருமைக்குரியவர். நாக தோஷம் நீங்க பாலபிஷேகம் செய்கின்றனர். புத்ர பாக்யம் வேண்டுவோர் பானக நைவைத்யம் செய்கின்றனர்.
மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளி அருள் பாலிப்பவர் அய்யனார். இத்தலத்தின் வில்வ மரத்தடியில் சுயம்புவாகத் தோன்றியவர். அவிமுக்தேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. சத்திய பூரண மகரிஷி என்பவர், வில்வ மரத்தடி சுயம்பு மூர்த்திக்கு ஆதிநாதன் என்ற திருநாமம் சூட்டி, பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பினார். ஆதிநாத அய்யனார்சாமி என்று போற்றுகின்றனர். இவருடைய சந்நிதியின் முன்பாக, முன்னடியான் எனப்படும் மதுரை வீரனை தரிசிக்கலாம். வீரசேனா, மதனசேனா தேவியர்கள் உடன் உள்ளனர். பெரிய அளவிலான குதிரை, யானை, புலி ஆகிய சுதை சிற்பங்களை காணலாம். ஆனந்தவல்லி சமேத அமராபதீஸ்வரர் கோவிலும், ஸ்ரீ தேவி பூ தேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவிலும் இவ்வூரில் இருக்கின்றன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.