அருள்மிகு சுந்தர வரதப் பெருமாள் திருக்கோவில், உத்திரமேரூர்

God Name : சுந்தர வரதப் பெருமாள்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

விராடனின் மகன் உத்தரன் ஆட்சி செய்த பகுதியானதால் உத்திரமேரூர் எனப் பெயர் கொண்டது. பல்லவர் காலத்து புராதனக்கோயில். பஞ்ச பாண்டவ சகோதரர்களும், பாஞ்சாலியும் வனவாச காலத்தில் இங்குள்ள பஞ்ச வரதர்களை வழிபட்டனர் என ஸ்தல வரலாறு. யமுனைக்கரையிலிருந்து வந்த விராடராஜன் இங்கு கோட்டை அமைத்ததாகவும், பின்னாளில் அதை ராஜேந்திரசோழன் கைப்பற்றியதாகவும் வரலாற்று குறிப்பொன்றும் உள்ளது. இவ்வூர் ராஜேந்திரசோழனால், வேதம் ஓதுவோர்க்கு அளிக்கப்பட்டதால் சதுர்வேதிமங்கலம் என அழைக்கப் பட்டதாம். கல்கண்டு, முந்திரி, திராட்சை பிரசாதமாக தருகின்றனர். பஞ்ச வரத ஸ்தலம்.
மூன்று தளங்களுடைய மும்மாடக்கோவில் என்பர். மூன்று தளங்களிலுமாகச் சேர்த்து ஒன்பது பெருமாள்களை சேவிக்கலாம். பல்லவர் காலத்து கட்டிக்கலையாக நந்திவர்மனால் கட்டப்பட்டக் கோவில். 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பர். மூலஸ்தானத்தில் சுந்தர வரதப் பெருமாள் கிழக்கே நோக்கி, நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இக்கோலத்தில் பீமனுக்கு ப்ரத்யட்சமானதாக ஐதீகம். மூலவரின் முன்பாக உள்ள உற்சவமூர்த்திகளான சுந்தர வரதர், உபயநாச்சிமார்கள், ஆண்டாள், கண்ணன் ஆகியோரின் திருவுருவங்களை சேவிக்கலாம். உள்பிரகாரத்தின் தெற்கே அர்ஜுனனுக்கு காட்சி தந்த அச்சு வரதர், மேற்கே நகுலனுக்கு காட்சி தந்த அநிருத்த வரதர், வடக்கே சகாதேவனுக்கு காட்சி தந்த கல்யாண வரதர் ஆகியோர் தாயாருடன் அமர்ந்துள்ளனர். ப்ருகு, மரீசி முனிவர்கள் உடன் உள்ளனர். இரண்டாம் தளத்தில் வைகுந்த வரதர் வீற்றிருக்கும் கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இவர் தர்மபுத்திரருக்கு காட்சி தந்தவர். பஞ்ச பாண்டவர்கள் ஐவருக்கும் தரிசனம் தந்த பஞ்ச வரதர்களை சேவிக்கும் பாக்யம் கிடைக்கின்றது. திருச்சுற்றில் யோக நரசிம்மர் மற்றும் நர நாராயணர்களை தெற்கிலும், அழகான கீதோபதேச கண்ணனையும், மேற்கில் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கும் லட்சுமி வராஹரையும் சேவிக்கலாம். அடுத்துள்ள மேல் தளத்தில், தென்திசை நோக்கி சிரசினை வைத்து ஆதிசேஷன் மீது சயனித்துள்ள அனந்தபத்மநாபன் எனப்படும் ஸ்ரீ ரங்கநாதர் வலது கரத்தால் மார்க்கண்டேயர் தலையில் ஆசிர்வதிக்கும் நிலையில் தரிசனம் தருகின்றார். கிழக்கே திருமகள், பாதத்தடியில் மது கைடபர்கள் காணலாம். சந்நிதியில் காணப்படும் சிவபெருமான் லிங்கமாக இல்லாமல் திருவுருவம் கொண்டு தரிசனம் தருவது சிறப்பான ஒன்று. தென்மேற்கு மூலையில் ஆனந்தவல்லித் தாயார். துவாரபாலிகைகளாக கங்காதேவியும், யமுனா தேவியும் இருப்பது வித்தியாசமான ஒன்று. புல்லாங்குழலுடன் கூடிய அழகான வேணுகோபாலன் திருவுருவத்தை விமானத்தில் கண்டு சேவிக்கலாம். மூலமூர்த்திகள் அனைத்தும் அத்தி மரத்தால் உருவாக்கப்பட்டதாக கூறுகின்றனர். கோவிலின் நுழைவாயிலருகேயுள்ள சந்நிதியில் வீர ஆஞ்சநேயரை சேவிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.