அருள்மிகு மங்கள மஹா மாரியம்மன் திருக் கோவில் (ஆட்டூர் - கங்காதரபுரம்)
God Name : இல்லை
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
கரூர்
Call : +91-
சுற்று வட்டார கிராமங்களில் வசித்தவர்கள்/வசிப்பவர்கள் ஆகியோரின் கண்கண்ட குலதெய்வமாக போற்றப்படுகின்றாள் இந்த மாரியம்மன். ஆதி காலத்தில் கோமலை சேர்ந்த அப்புசாமி அய்யரும் அவரது மகன் பரமேஸ்வர அய்யரும் அவரது மகனான கோமல் சுப்ரமண்ய அய்யரும் இக்கோவிலுக்கு கைங்கர்யங்கள் செய்து வந்ததாக குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது. திண்ணையுடன் இருந்த பழைய ஓட்டுக்கட்டட கோவிலை விரிவுபடுத்தி, ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் உருவாக்கி உள்ள தனியார் ஒருவரை நிச்சயம் பாராட்ட வேண்டும். கோடிக்கணக்கான பணம் செலவழித்து கோவிலை விரிவு படுத்தியதுடன் நில்லாமல் பக்தர்கள் இளைப்பாற விடுதி ஒன்றும் கட்டியுள்ளனர். வேத பாடசாலை ஒன்றும் ஆரம்பித்து ஏழை ப்ராம்மண சிறுவர்களுக்கு இலவச கல்வி, தங்குமிடம், உணவு ஆகிய கைங்கர்யங்களை செய்து வருகின்றனர். திருமண மண்டபம் ஒன்றும் விரைவில் கட்ட இருக்கிறார்கள். திரு.வெங்கடேஷ் நாராயணஸ்வாமி மற்றும் அனுஜா வெங்கடேஷ் (என்.ஆர்.ஐ) ஆகியோர் இந்த புண்ய காரியங்களை செய்து வருகின்றனர். (ஸ்ரீலஸ்ரீ ஞானானந்த அகஸ்திய குரு கிருபா சேவா ட்ரஸ்ட்) (23.6.2004 -- மஹா கும்பாபிஷேகம்) வெளியூர்களிலிருந்து வருபவர்களின் வசதிக்காக அபிஷேக பொருட்களை அவர்களே ஏற்பாடு செய்கின்றனர். முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். உண்டியல் கிடையாது. காணிக்கை ஏதும் செலுத்த வேண்டியதில்லை.
ஆட்டூர் எனப்படும் கங்காதரபுரத்தில் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள அன்னை ஸ்ரீ மங்கள மஹா மாரியம்மன் மிகுந்த வரபிரசாதி. சிறிய மூர்த்தமாக அழகே உருவாக தரிசனம் தருகின்றாள். பின்னணியில் மிகப் பெரிய திருமேனியுடன் மாரியம்மன் திருவுருவம் உள்ளது. கருவறை வாசலில் இரண்டு துவார பாலகிகள் பெரிய திருவுருவங்களாக காவலுக்கு உள்ளனர். ஸ்ரீ பால கணபதி, ஸ்ரீ பால முருகன், ஸ்ரீலஸ்ரீ லோபமாதா சமேத அகஸ்தியர், மற்றும் உற்சவ மூர்த்திகளை வலச் சுற்றில் காணலாம். ஸ்ரீ காளியம்மன், காளியம்மனின் பரிவாரங்கள், பேச்சியம்மன் மற்றும் கிராம தேவதைகளும் தனிக் கோவிலில் இடம் பெற்றுள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.