அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோவில் (இஞ்சிக்குடி)
God Name : பார்வதீஸ்வரர் மற்றும் ஆதி கேசவப் பெருமாள்
திருக்கழுக்குன்றம் கோவில்
கரூர்
Call : +91-
அம்பரன் எனும் அசுரனைக் கொன்ற உக்ரம் அடங்காமல் இருந்த காளி தேவியை, சாந்தி பெற்று இடப்பாகத்தை அடையுமாறு கூறினார் திருமால். அதன்படி தனது காளி வடிவத்தை விடுத்து இத்தலத்திலுள்ள சந்தன மரத்தடியில் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தாள். அப்போது அம்பாளுக்கு துணையாக நின்ற திருமால் இவ்வூரில் ஆதி கேசவப் பெருமாளாக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். சிவலிங்கத்திற்கு நிழலாக அமைந்த சந்தன மரம் இத்தலத்து ஸ்தல விருட்சமாக விளங்குகிறது.
மூலவர்: பார்வதீஸ்வரர், அம்பாள்: சாந்த நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் பார்வதீஸ்வரர். ஒளிப்பிழம்பாக காட்சி தரும் தேஜோமயத் திருமேனி. பார்வதி தேவிக்கு தமது மேனியின் இடப்பாகத்தை அளித்தமையால் பார்வதீஸ்வரர் என்ற திருநாமத்தைக் கொண்டார்.
சாந்தமே உருவாக காட்சி தருகின்றாள் அம்பாள் சாந்த நாயகி. வலக்கரத்தில் மலரை ஏந்தி அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றாள். அம்பரனைக் கொன்ற உக்ரம் தணிந்து பின் சாந்தி பெற்ற ஸ்தலம்.
சிறப்பு மூர்த்தமான காட்சி தந்த நாயகரின் திருவுருவத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். மேற் கரங்களில் மான்-மழு கொண்டும், கீழ் வலது கரம் தொடையில் வைத்தும், கீழ் இடது கரம் ரிஷபத்தின் தலையில் ஊன்றியும், நின்ற கோலத்தில் தரிசனம் தரும் அற்புதமான வடிவம்.
ஒரு சிவராத்திரி தினத்தன்று, வேடன் ஒருவனுக்கு, ரிஷபாரூடராய் காட்சி தந்த இறைவன் என்பதால் காட்சி தந்த நாயகர் என்ற பெயர். இவருக்கு எதிரே வில்லும்-அம்பும், வாளும் ஏந்திய வேடனின் திருவுருவம் காணலாம்.
விமானத்தின் தென்புறத்தில் உள்ள பிரபைக்குள் சட்டைநாதர் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். அருகே சென்று வழிபட படிக்கட்டுகள் அமைத்துள்ளனர்.
கோஷ்ட மூர்த்தங்களுள் செல்வ கணபதி அழகாக இருக்கின்றார். லிங்கோத்பவர் இருக்க வேண்டிய இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். கொற்றவை எனப்படும் துர்க்கை வித்தியாசமான அழகுடன் காட்சி தருகின்றாள்.
சூரியனும் சந்திரனும் அருகருகே காட்சி தருகின்றனர். சண்டிகேஸ்வரி உடனாய சண்டிகேஸ்வரர் திருமணக் கோலத்தில் தரிசனம் தருகின்றார்.
தோரண வாசல், கோபுர வாசல், அணுக்கன் வாசல் என மூன்றுவித வாசல்களைக் கொண்ட கோவில்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.