அருள்மிகு மந்தாரவனேச்வரர் திருக்கோவில் (செதலப்பதி - கோவில்பத்து)

God Name : மூலவர்: ஸ்ரீ முக்தீச்வரர், சிறப்பு மூர்த்தம்: ஆதி விநாயகர் எனப்படும் நரமுக விநாயகர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

கரூர்

Call : +91-

ஒரு அபசாரத்திற்கு ஆளான பிரம்ம தேவர், பிராயச்சித்தம் வேண்டி, பூலோகம் வந்து இத்தலத்திலுள்ள மந்தார விருட்சத்தின் கீழ் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மந்தாரவனேச்வரரை வழிபட்டு, பூஜித்து வரங்களைப் பெற்றார். அவர் உண்டாக்கிய பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி இவ்விறைவனை வழிபடுவோர்க்கு நற்பலன்கள் அருளுமாறு வேண்டினார். வாலகில்லியர் என்பவரது வடிவத்தைக் கண்டு கேலி செய்த மஹாலட்சுமியை சபித்து பூலோகம் செல்லுமாறு பணித்தார். லட்சுமி இல்லாத வைகுந்தத்தில் இருக்கப் பிடிக்காத மஹாவிஷ்ணுவும் பின் தொடர்ந்தார். இருவருமாக மந்தாரவனம் வந்து இவ்விறைவனை வழிபட்டனர். லட்சுமியின் சாபம் நீங்கப் பெற்ற ஸ்தலம் இது. மஹாவிஷ்ணு இங்கு சக்கர தீர்த்தத்தை ஏற்படுத்தி, மாதவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து வழிபட்டு வந்தார். கணவனின் சொல் கேளாது, தந்தை மீதுள்ள பாசத்தால், தக்கன் செய்த யாகத்திற்கு, அழைப்பின்றி சென்ற தாட்சாயிணி, அந்த பாவத்தைத் தொலைக்க இங்கு வந்து மந்தார மரத்தின் மூலத்தில் முளைத்தெழுந்த சிவலிங்கத்தை ஆராதித்து, பாவத்தைத் தொலைத்துக் கொண்டாள். கோதாவரி நதி தீரத்திலுள்ள ஒரு பட்டணத்தை ஆண்டு வந்த தேவவர்மன் ஒரு சிவ பக்தன். தனது மகனான நற்சோதி என்பவனுக்கு பட்டம் கட்டி விட்டு உயிர் நீத்தான். அவனது மனைவி தருமசீலை என்பவளும் உடன்கட்டை ஏறினாள். பெற்றோரின் திலநீர் மற்றும் பிண்டதானத்தை பித்ருக்கள் நேரில் வந்து பெற்றுக் கொள்ளும் ஸ்தலத்தைத் தேடி, புண்ணிய யாத்திரை புறப்பட்டான். க்ஷேத்ராடனம் செய்து கொண்டிருக்கையில் வழியில் காலவ முனிவரை தரிசித்தான். அவரது யோசனைப்படி மந்தாரவனம் வந்து, ஸ்வாமியையும் அம்பாளையும் தரிசித்துவிட்டு பிரம்ம தீர்த்தக் கரை அடைந்தான். குளக்கரையில் தனது மூதாதையர்களும், பித்ருக்களும் இருக்கக் கண்டு, ஆனந்தம் அடைந்தான். பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சங்கல்பம் செய்து தில தர்ப்பணம், பிண்டம் ஆகியன தந்து பித்ருக்கள் அதை வாங்கி உண்பதைப் பார்த்து அளவிலா மகிழ்ச்சி கொண்டான். இந்த நிகழ்வு நடந்ததால் இத்தலத்தை திலதர்ப்பணபுரி என்று அழைக்கின்றனர். அகால மரணம் அடைந்தவர்களுக்கு இங்கு தர்ப்பணம் செய்தால், அவர்கள் சுவர்க்கம் செல்கிறார்கள் என்பது ஐதீகம். இது ஒரு தேவாரத்திருத்தலம்.
மூலவர்: ஸ்ரீ முக்தீச்வரர், அம்பாள்: ஸ்ரீ பொற்கொடி நாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ஸ்ரீ முக்தீச்வரர் எழுந்தருளியுள்ளார். சுயம்பு லிங்க மூர்த்தம். பிரம்மாண்டமான அழகிய திருமேனி. ஸ்ரீ மந்தாரவனேச்வரர் என்ற திருநாமமும் உண்டு. அழகே உருவாக ஸ்ரீ பொற்கொடி நாயகி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். சதுர் புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. ஸ்வர்ணவல்லி என்ற பெயரும் உண்டு. கோஷ்ட மூர்த்தங்கள் யாவும் அழகாக இருக்கின்றன. மூல விநாயகர், பைரவர், சூரிய-சந்திரர்கள், நால்வர், ஸ்ரீ தேவி பூதேவி உடனாய பெருமாள், தட்சிணாமூர்த்தி ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். தட்சிணாமூர்த்திக்கு மேற்கே நான்கு பாணலிங்கங்களைக் காணலாம். இவற்றை பிதுர்லிங்கங்கள் என்பர். கை கூப்பியபடி நற்சோதி மகாராஜா காணப்படுகின்றார். மற்றொருவரின் சிலை - ராமர் என்று எழுதப்பட்டுள்ளது. தசரதருக்கும், ஜடாயுவுக்கும் ராமர் இங்கு திலதர்ப்பணம் செய்ததாகக் கூறுகின்றனர். ஸ்தல விருட்சமான மந்தார மரத்திற்குக் கீழே ஸ்ரீ மந்தாரவனேச்வரர் லிங்க வடிவில் தரிசனம் தருகிறார். கோவிலுக்கு வெளியே உள்ள சந்நிதி ஒன்றில் மேற்கு பார்த்தவாறு ஆதி விநாயகர் எனப்படும் நரமுக விநாயகர் எழுந்தருளியுள்ளார். ஜடாமுடியுடன் கூடிய பெரிய திருமேனி. சதுர் புஜங்களில் பாசம், அங்குசம், அபய முத்திரை ஆகியவற்றைத் தாங்கியும், இடக்கையை இடது காலின் மீது வைத்தும் காணப்படுகின்றார். ஆதியில் பார்வதி தேவி பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையார் இவரே என்கின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.