அருள்மிகு அம்பர் பெருந்திருக்கோவில் அல்லது பிரம்மபுரீஸ்வரர் கோவில் (அம்பல்)

God Name : பிரம்மபுரீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

கரூர்

Call : +91-

அம்பன் - அம்பரன் வழிபட்டதால் இத்தலம் அம்பர் எனப் பெயர் கொண்டது. சோமாசி மாற நாயனார் பிறந்து, முக்தியடைந்த ஸ்தலம். இலுப்பை மரங்களால் சூழப்பட்ட கோவில். அம்பர் சிலம்பி என்ற பெண்ணால் இலக்கியப் பிரசித்தி பெற்ற ஸ்தலம். அன்ன வடிவம் கொண்ட பிரம்மன் உண்டாக்கிய தீர்த்தம் அன்னமாம் பொய்கை உள்ளது.
மூலவர்: பிரம்மபுரீஸ்வரர், அம்பாள்: பூங்குழலம்மை. கோச்செங்கட்சோழன் கட்டிய 78 மாடக்கோவில்களுள் ஒன்று. கட்டுமலை மீது படிகளேறி செல்ல வேண்டும். படியேறும் முன்பாக ஸ்தல விநாயகரான படிக்காசு விநாயகரையும் அருகேயுள்ள மற்ற இரண்டு விநாயகர்களையும் வணங்கி ஆசி பெற்று, பின்னர் கட்டுமலை ஏறிச் செல்லலாம். மூலஸ்தானத்தில் பிரம்மபுரீஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். பின்புற சுவரில் பார்வதி - பரமேச்வரன் - கணபதியுடன் கயிலாய காட்சியாக தரிசனம் தருகின்றனர். மாடக்கோவிலின் சுற்றுப்பிரகாரத்தில் சுப்ரமண்யஸ்வாமி, பாதாள லிங்கம், நந்தியம்பெருமான், சண்டிகேஸ்வரர், நடராஜர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். கோஷ்ட மூர்த்தங்கள் அனைத்தும் அழகாக உள்ளன. இங்குள்ள காட்சி கொடுத்த நாயகரின் திருவுருவம் மிகவும் அழகானது. பார்த்துக் கொண்டே இருக்கத் தூண்டும் அழகு. கீழ் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள் அம்பிகை பூங்குழலம்மை எனப்படும் வண்டமர் பூங்குழலி. சுகந்த குந்தளாம்பிகை என்ற திருநாமமும் உண்டு. விநாயகர், சுப்ரமண்யர் சந்நிதிகளும் கீழ் பிரகாரத்தில் உள்ளன. இவ்விறைவனை வழிபட்ட பிரம்ம தேவரின் திருவுருவமும், அம்பன் - அம்பரன் அசுரர்களை கொல்ல வந்த காளியின் திருவுருவமும் தரிசிக்கலாம். காளியின் உருவச்சிலை தீண்டாத் திருமேனியாக உள்ளது. ஸ்தல விருட்சமான புன்னை மரத்தடியில் ஆதிமூர்த்தியான சிவபெருமான் லிங்க வடிவில் எழுந்தருளி தரிசனம் தருகின்றார்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.