அருள்மிகு அச்சம் தவிர்த்த விநாயகர் திருக்கோவில் (மாகாளம் - யாக மண்டபம்)

God Name : அச்சம் தவிர்த்த விநாயகர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

கரூர்

Call : +91-

அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான சோமாசி மாற நாயனார், சோம யாகம் ஒன்றை செய்ய ஆசைப்பட்டு, அம்பர் எனும் ஊருக்கும் அம்பர் மாகாளம் எனும் ஊருக்கும் இடையே உள்ள பகுதியை தேர்ந்தெடுத்தார். தான் நடத்தவிருக்கும் சோமயாகத்திற்கு திருவாரூர் தியாகேசனே நேரில் வந்து அவிர்பாகத்தைப் பெற வேண்டும் என்ற தனது விருப்பத்தை சுந்தரமூர்த்தி நாயனாரிடம் தெரிவித்தார். இது விஷயமாக சுந்தரரின் அன்பைப் பெற, அவருக்கு பிடித்த தூதுளங்கீரையைப் பறித்துக் கொண்டு போய், சுந்தரரின் மனைவி பரவை நாச்சியாரிடம் கொடுத்து, சுந்தரரிடம் சிபாரிசு செய்ய சொல்கிறார். அம்மையாரும் கீரையை சமைத்து சுந்தரருக்கு பரிமாறி விட்டு, சோமாசி மாற நாயனாரின் விண்ணப்பத்தை தெரிவிக்கின்றார். திருவாரூர் தியாகேசனிடம் சென்று சோமாசி மாற நாயனாரின் சோமயாகம் பற்றியும், நாயனாரின் ஆசையைப் பற்றியும் தெரிவித்தார் சுந்தரமூர்த்தி நாயனார். நேரில் சென்று அவிர்பாகத்தைப் பெற்றுக் கொள்வதாக வாக்கு அளிக்கின்றார் தியாகேசன். வைகாசி ஆயில்ய நன்னாளில் சோமாசி மாற நாயனாரும் அவரது மனைவி சுசீலையம்மாளும், இத்தலத்து விநாயகரை வேண்டிக் கொண்டு யாகத்தை ஆரம்பிக்கின்றனர். பூர்ணாஹுதிக்காக எல்லோரும் காத்திருக்க, தியாகேசனுக்காக நாயனார் காத்திருந்தார். தியாகேசப் பெருமானோ - பறை உருவில் நீசக் கோலம் கொண்டு இறந்த கன்றுகுட்டியை தோளில் சுமந்து கொண்டு, நான்கு வேதங்களை நாய்களாக மாற்றி கையில் பிடித்துக் கொண்டு வந்து சேர்ந்தார். பார்வதியோ - நீசப் பெண்மணியாக வேடம் பூண்டு, கள் குடத்தை ஏந்தி, கணபதியையும் - முருகனையும் சிறுவர்களாக கையில் பிடித்துக் கொண்டு தாரை - தப்பட்டை முழங்க, யாக குண்டம் இருக்கும் இடத்திற்கு வந்தனர். அவிர்பாகம் பெற வேண்டிய இடத்தில் யாரோ நீசன் வந்து மாசு படுத்தி விட்டானே என எல்லோரும் வருந்த, அச்சம் தேவையில்லை - வந்திருப்பவர் தியாகேசனே என விநாயகர் உணர்த்துகிறார். இறைவனும் பறை உருவில் வந்த கோலத்தை விடுத்து, அம்பிகையுடன் ரிஷபாரூடராய் காட்சி தருகின்றார் என ஸ்தல வரலாறு. வைகாசி மாத ஆயில்ய நட்சத்திர நாளில் நடைபெறும் யாக உற்சவ நாளில் பெருவாரியாக மக்கள் கூடுவர். அன்று இறைவன் எழுந்தருளும் கோலம் கண்டு மகிழ்வார்கள்.
மூலஸ்தானத்தில் எழுந்தருளி அருள் புரிபவர் அச்சம் தவிர்த்த விநாயகர். அழகே உருவானவர், மிகுந்த வரப்பிரசாதி. வலது கை சுட்டு விரலால், வந்திருப்பவர் இறைவனே என நாயனாருக்கு உணர்த்தியவர். இங்கு நடந்த சோம யாகத்தில் மாசு ஒன்றுமில்லை என சோமாசி மாற நாயனாருக்கு எடுத்துரைத்து அவரது அச்சத்தைப் போக்கியவர். அதனால் அச்சம் தவிர்த்த விநாயகர் எனப் பெயர் கொண்டார்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.