அருள்மிகு மனுநாதேஸ்வரர் திருக்கோவில் (மருத்துவஞ்சேரி)

God Name : ஸ்ரீ மனுநாதேச்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

கரூர்

Call : +91-

இரண்டாவது மனு, இத்தலத்தில் ஒரு யாகம் செய்தார். யாகத்திற்கு வருகை தரும் 100 அந்தணர்களுக்கு நிலமும் வீடும் தருவதாக அறிவித்தார். 98 அந்தணர்களே வந்து பெற்றுக் கொண்டனர். இதனால் மனு வருத்தமுற்றார். மறு நாள் இரண்டு வயோதிக அந்தணர்கள் ஒரு சிறுவனின் துணையோடு வந்தனர். வந்தவர்களோ தாங்கள் தானம் வாங்கும் வழக்கமில்லை என மறுத்து விட்டனர். மீண்டும் வருத்தமுற்ற மனுவின் முன் தங்களது சுயரூபம் காட்டி நின்றனர். ஒருவர் சிவபெருமான், மற்றவர் வரதராஜன். துணை வந்த சிறுவன் விநாயகர். அந்த இரு அந்தணர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களில் - ஒன்றில் சிவாலயமும், மற்றொன்றில் பெருமாள் கோவிலும் ஸ்தாபிக்கப்பட்டன. சிவாலயமே மனுநீதீச்வரர் கோவில். பெருமாள் கோவிலில் லட்சுமி நாராயணர், வரதராஜர் என இரண்டு மூலவர்கள் சேவை சாதிக்கின்றனர். இவ்வூரில் பூரணா புஷ்களா சமேத அய்யனார் கோவில் ஒன்றும் உள்ளது. ஸ்வாமிக்கு மருதப்பர் என்று பெயர்.
மூலவர்: ஸ்ரீ மனுநாதேச்வரர், அம்பாள்: மாணிக்க சிவகாமி. மூலவரான ஸ்ரீ மனுநாதேச்வரர் சிவலிங்க வடிவினராக மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ளார். மேற்கு நோக்கிய சந்நிதி. தெற்கு நோக்கிய சந்நிதியில் அன்னை மாணிக்க சிவகாமி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். மண்டபத்தில் விநாயகரையும், பிரகார வலச்சுற்றில் சுப்ரமண்யர், சூரியன், தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர் ஆகிய மூர்த்தங்களையும் தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.