அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதஸ்வாமி திருக்கோவில் (முடிகொண்டான்)
God Name : ஸ்ரீ காசி விஸ்வநாதர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
கரூர்
Call : +91-
மூலவர்: ஸ்ரீ காசி விஸ்வநாதர், அம்பாள்: ஸ்ரீ விசாலாட்சி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான ஸ்ரீ காசி விஸ்வநாதர். மேற்கு பார்த்த சந்நிதி. தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பிகை ஸ்ரீ விசாலாட்சி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். வலச்சுற்றில் விநாயகர், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ சோமாஸ்கந்தர், ஆறுமுகன், துர்க்கை, பைரவர், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். ஆறுமுகங்களுடைய மூலவருக்கு ஒரு முகத்துடன் உற்சவ மூர்த்தியாக இருக்கின்றார். நித்ய பூஜைகளும் வழிபாடுகளும் சிரத்தையாக செய்யப்படுகின்றன. வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு நீராட வசதியும், சாப்பாடு வசதியும் தாராளமாக செய்துள்ளனர். 'முடிகொண்டான் சாதமும் மூலக்குள தீர்த்தமும்' என்ற பழமொழியே உள்ளது. இவ்வூரின் மிகவும் வரப்பிரசாதியான ஸ்ரீ செல்வ விநாயகர் மூலக்குளம் அருகே எழுந்தருளியுள்ளார். அதை அடுத்துள்ள சிவன் கோவிலில் ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இந்த கோவில் கிராமத்தின் தென்புறத்தில் அமைந்துள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.