அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோவில் (நன்னிலம்)
God Name : மதுவனேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
கரூர்
Call : +91-
தங்களைத் துன்புறுத்தும் அசுரர்களிடமிருந்து தப்பிக்க எண்ணி, தேவர்கள் தேனீக்களின் வடிவம் கொண்டு இத்தலத்தில் தங்கி, இவ்விறைவனை வழிபட்டு வந்தனர். சுவாமியின் அருளால் துன்பம் நீங்கப் பெற்றனர். தேனீக்கள் பூஜித்தமையால் இறைவனுக்கு மதுவனேஸ்வரர் என்ற பெயரும், இறைவிக்கு மதுவன நாயகி என்ற பெயரும் வந்தன.
சூரியன் இவ்விறைவனை வழிபட்டு தனது மங்கிய ஒளியை நீக்கிப் பிரகாசமடைந்தான். தெற்கில் யமனும், மேற்கில் வருணனும், கிழக்கில் இந்திரனும், வடக்கில் குபேரனும் லிங்கம் அமைத்து வழிபட்டதாகக் கூறப்படுகின்றது. அகஸ்தியரும், பிரம்மனும் வழிபட்டுள்ளனர்.
தேவர்கள், சூரியன், பிருஹத்ராஜன் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.
ஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் நடந்த போட்டியில், மகாமேருவின் ஒரு சிகரத்தை வாயு பகவான் பெயர்த்தெடுத்துச் செல்லும்போது ஒரு துளி பூமியில் விழுந்தது. அந்த இடமே நன்னிலம் என்பர். தேவாரத்தில் "நன்னிலத்துப் பெருங்கோவில்" என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவாரத் திருத்தலம்.
மூலவர்: மதுவனேஸ்வரர், அம்பாள்: மதுவன நாயகி எனப்படும் தேவகாந்தாரநாயகி.
கோச்செங்கட் சோழன் கட்டிய 78 மாடக்கோவில்களுள் ஒன்று. கட்டுமலை மீது ஏறிச் சென்று மூலவரை தரிசிக்க வேண்டும்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மதுவனேஸ்வரர். உயரமான பாணத்துடனும், சதுரமான ஆவுடையாருடனும் கம்பீரமாகக் காட்சி தரும், ஒளி வீசும் தேஜோமய லிங்கம். சுயம்பு மூர்த்தம். நாகாபரணங்களுடன் தரிசனம் தருகின்றார். கிழக்கு பார்த்த சந்நிதி.
கீழ் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள் மதுவன நாயகி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். இவருக்கு தேவகாந்தார நாயகி என்ற பெயரும் உண்டு.
கோஷ்ட மூர்த்தங்கள், பரிவார தெய்வங்கள் அனைத்தும் அழகுற இருக்கின்றன. அகத்தீஸ்வரரும், பிரம்மபுரீஸ்வரரும் எழுந்தருளியுள்ளனர்.
சனீஸ்வரர் அருகில் அனுக்ரஹ பைரவர் காட்சி தருகின்றார். இவருக்கு நெய்விளக்கு ஏற்றி வழிபட்டால் எதிரிகள் அடங்குவர் என்பர். மகிஷன் தலை மீதுள்ள சிவதுர்க்கை, சித்திரகுப்தன், சண்டிகேஸ்வரர் - சண்டிகேஸ்வரி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
கோபுர நுழைவு வாயிலில் கைலாஸ காட்சிகளைக் காட்டும் அழகிய சுதை சிற்பங்களைக் காணலாம்.
கட்டுமலை மீதுள்ள மாடக்கோவில் என்பதாலும், மூலவரை மேலே தரிசனம் செய்துவிட்டு, கீழே வந்து சண்டிகேஸ்வரரை தரிசிப்பதாலும், கோமுகத்தின் மேலுள்ள பிரம்மா வரை வலமாகவும், பின்னர் இடமாக துர்க்கை வரை வந்தும் சோமசூத்ர பிரதக்ஷிணம் செய்வது மரபாக உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.